இந்தியாவில் மிகவும் அதிக பணம் ஈட்டும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சல்மான் கான். சினிமா, விளம்பரங்கள், டிவி நிகழ்ச்சிகள், பிக்பாஸ் என பல்வேறு விதங்களில் சல்மான் கான் சம்பாதித்து வருகிறார். அவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.2,850 கோடி என கணக்கிடப்பட்டிருக்கிறது.

57 வயதாகும் அவர் ஒரு திரைப்படத்திற்கு சுமார் ரூ.220 கோடி வரையிலும் சம்பாதிக்கிறாராம். தன்னிடம் பல ஆயிரம் கோடி பணமிருந்தும் சல்மான் கான் ஆடம்பரமாக வாழ விரும்புவதில்லை என கூறப்படுகிறது. அவர் ஒரு சிறிய வீட்டில்தான் வாழ்ந்து வருகிறாராம். அந்த வீட்டில் ஒரு சிறிய சோபா, டைனிங் டேபிள், ஒரு அறையில் ஜிம் மற்றும் ஒரு ரூம் இருக்கும்.