தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு தற்போது உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கிறார். பல சூப்பர் ஹிட் படங்களின் மூலம் முன்னணி நடிகராக உயர்ந்துள்ள சிம்பு நடிப்பில் அண்மையில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற படத்தில் சிம்பு நடித்துள்ளார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக் போன்றோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். அண்மையில் டிரைலர் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த இசை வெளியீட்டு விழாவின் போது சிம்பு பேசிய விஷயம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது தனக்கு நிஜத்திலும் ஜோடியில்லை படத்திலும் ஜோடி இல்லை என சிம்பு கூறியுள்ளார். தற்போது நடிகர் சிம்புவுக்கு 39 வயது ஆகும் நிலையில்  எப்போது திருமணம் என்பது தான் ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது. மேலும் நடிகர் சிம்பு தற்போது தனக்கு நிஜத்திலும் ஜோடி இல்லை படத்திலும் ஜோடி இல்லை என்று கூறியது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வரும் நிலையில் கவலைப்படாதீங்க சீக்கிரம் உங்களுக்கு திருமணம் நடக்கும் என ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள்.