ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி தேசிய நெடுஞ்சாலையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். இந்த வாகனத்தை குறி வைத்து வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை மோதச்செய்து பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 40 பாதுகாப்பு படையினர் வீர மரணம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலை பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஸ் இ முகமது என்ற பயங்கரவாத அமைப்பு நடத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிப்ரவரி 26 அன்று பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் இந்திய விமானியை பாகிஸ்தான் சிறை பிடித்து வைத்திருந்தது. அதன் பின் விடுவித்து விட்டது. இருப்பினும் நாடுகளுக்கும் இடையே மோதல் வலுப்பெற்று கொண்டிருந்தது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவம் தற்போது வெளியிடுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது “அமைதியை விரும்பும் எங்கள் நாட்டின் மீது போர் தொடுத்தாலோ அல்லது வலிய தாக்குதல் நடத்தினாலோ நாங்கள் சும்மா விட மாட்டோம். எங்கள் அன்னை தேசத்தின் ஒவ்வொரு அங்குள்ள நிலத்தையும் பாதுகாப்பதற்கு எதிரிக்கு எதிராக போராட ஆயுதப்படைகள் தயாராக இருக்கின்றன” என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பாகிஸ்தான் பிரதமரான ஷெபாஷ் ஷெரீப் கூறியதாவது “புல்வாமா தாக்குதல் என பொய்யாக கூறி எங்கள் நாட்டு வான் பரப்பின் மீது அத்துமீறி நுழைந்த இந்தியாவிற்கு தக்க பதிலடி கொடுத்த இந்திய விமான படைப்புக்கு தேசம் மரியாதை செலுத்துகின்றது. மேலும் அனைவரிடமும் அமைதியை விரும்பும் பாகிஸ்தானியர்கள் நமது நாட்டை பாதுகாக்கும் கடமையையும் தவறவிடக்கூடாது” என்று அவர் கூறியுள்ளார்.