பாகிஸ்தான் நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டதில் 22 நபர்களுக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் ஆங்கில புத்தாண்டு நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பல நாடுகளில்  இரவு நேரங்களில், வான வேடிக்கைகள் ஆட்டம், பாட்டம் என்று உற்சாகமாக புத்தாண்டு  வரவேற்க்கப்பட்டது. இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டில் வினோதமான முறையில் ஆங்கில புத்தாண்டை வரவேற்றிருக்கிறார்கள்.

அதாவது, இஸ்லாமாபாத், கராச்சி, ராவுல்பெண்டி மற்றும் லாகூர் போன்ற நகரங்களில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். கண்மூடித்தனமாக அவர்கள் சுட்டதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 22 நபர்களை குண்டு துளைத்தது. காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.