உக்ரைன் போர் மூலமாக ரஷ்ய நாட்டை இரண்டாக்குவதற்கு முயல்கிறார்கள் என்று அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின் கூறியிருக்கிறார்.

ரஷ்யா, கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி அன்று உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்க தொடங்கியது. அந்த போர் சுமார் 11 மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இரண்டு நாட்டு ராணுவங்களும் தொடர்ந்து போரில் ஈடுபட்டு வருகின்றன. அதே நேரத்தில் இந்த போரில் இரண்டு தரப்பிலும் பல உயிர்பலிகள் ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில், புத்தாண்டை முன்னிட்டு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தொலைக்காட்சி மூலமாக மக்களிடையே உரையாடியிருக்கிறார். புத்தாண்டு வாழ்த்துக்களை கூறிவிட்டு அவர் தெரிவித்ததாவது, உக்ரைன் மீது மேற்கொண்டு வரும் போர் கடுமையானது. எனினும் தேவையான ஒன்று தான் என்றார்.

மேலும்,  அமைதியை உண்டாக்க மேற்கத்திய நாடுகள் பொய் கூறி வருகின்றன என்றும் குற்றம் சாட்டினார். இது மட்டுமல்லாமல் உக்ரைன் நாட்டில் நடக்கும் போரை வைத்து, ரஷ்யாவை இரண்டாக்க முயற்சிகள் நடக்கிறது என்று கூறியிருக்கிறார்.