தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் படம் வெளியானது. இதையடுத்து கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகிய விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் என்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டினார்  சூர்யா. அதன்பின் சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் வரலாற்று படம் “சூர்யா-42”. இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடிக்கிறார்.

பாலிவுட் திரையுலகை சேர்ந்த நடிகையான திஷா பதானி சமூகவலைதளபக்கங்களில் ஆக்டிவாக இருந்து வித விதமான புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் ஒரு நிகழ்ச்சிக்கு படுகவர்ச்சியான உடையில் வருகை தந்திருக்கிறார் திஷா பதானி. இந்த புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது. திஷா பதானியின் இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.