தளபதி விஜய் இப்போது டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித்குமார் தயாரிக்கிறார். மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்கு அடுத்து விஜய் மற்றும் லோகேஷ் மீண்டுமாக இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை திரிஷா, நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர் மிஸ்கின், இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி (நடிகராக அறிமுகமாகிறார்), மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் உட்பட பலர் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு “லியோ” என பெயரிடப்பட்டு உள்ளது. இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. லியோ படம் வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் லியோ படக்குழுவினர் புது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதாவது, காஷ்மீர் படபிடிப்புக்காக தனி விமானத்தில் சென்ற வீடியோவை பகிர்ந்து உறுதிபடுத்தி உள்ளனர். அப்போது விமானத்திலிருந்த அனைவரையும் பார்த்து தளபதி விஜய் கையசைத்து வரவேற்றார். அதோடு படக்குழுவினரை வீடியோ எடுத்து மகிழ்ந்து உள்ளார். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.