ஆர்.ஜே.பாலாஜியிடம் தஞ்சமடைந்த ஒரு பெண் மர்மமான முறையில் இறந்துவிட்டதால், கொலைக்கான காரணம் குறித்து தேடியலையும் கதைக்களமாக “ரன் பேபி ரன்” உள்ளது.
கதாநாயகன் ஆர்.ஜே.பாலாஜி வங்கியில் பணிபுரிந்து வரும் நிலையில், இவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெறுகிறது. இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷை மர்ம நபர்கள் துறத்துவதால் ஆர்.ஜே.பாலாஜியின் காரில் அவருக்கு தெரியாமல் பின்புறம் ஏறிச் செல்கிறார். இதையடுத்து ஆர்.ஜே.பாலாஜியின் வீடு வரை போகும் ஐஸ்வர்யா ராஜேஷ், அவரிடம் தான் ஆபத்தில் உள்ளதாக சொல்லி அடைக்கலம் கேட்கிறார். முதலில் மறுப்பு தெரிவிக்கும் ஆர்.ஜே.பாலாஜி, பின் தனது வீட்டில் உள்ள ஒரு அறையில் இடம் கொடுக்கிறார்.
அதன்பின் காலையில் எழுந்து பார்க்குபோது, ஐஸ்வர்யா ராஜேஷ் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறார். பின் போலீஸ் நண்பன் விவேக் பிரசன்னாவின் அறிவுரை படி, ஐஸ்வர்யா ராஜேஷ் சடலத்தை வீட்டிலிருந்து அப்புறப்படுத்த முயற்சி செய்கிறார். ஒருக்கட்டத்தில் சடலத்தை செஞ்சிக்கு டிரிப் அடிக்கும் கபாலி விஸ்வாந்த் காரில் வைத்து விட்டு செல்கிறார் ஆர்.ஜே.பாலாஜி.
வீட்டிற்கு சென்றதும் காரில் இருந்த சடலத்தை பார்க்கும் கபாலி விஸ்வாந்த் அதிர்ச்சி அடைகிறார். செய்வதறியாது திணறும் கபாலி விஸ்வாந்த், அருகில் உள்ள சுடுகாட்டில் ஐஸ்வர்யா ராஜேஷ் சடலத்தை எரித்து விடுகிறார். இதுகுறித்து காவல்துறையினருக்கு தெரியவர கபாலி விஸ்வாந்த் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொள்கிறார்.
இவையனைத்தையும் தூரத்திலிருந்து பார்த்து வருகிறார் ஆர்.ஜே.பாலாஜி. இந்த நிலையில், ஆர்.ஜே.பாலாஜிக்கு மர்மநபர் போன் போட்டு மிரட்டுகிறார். ஆகவே கடைசியில் ஐஸ்வர்யா ராஜேஷை கொலை செய்தது யார்..?, கபாலி விஸ்வாந்த் தற்கொலை செய்ய காரணம் என்ன?, ஆர்.ஜே.பாலாஜி இப்பிரச்சனையில் இருந்து விடுபட்டு திருமணம் செய்துக்கொண்டாரா? என்பதே படத்தின் மீதிக் கதை ஆகும். கிரைம் திரில்லர் பாணியில் படத்தை டைரக்டு செய்திருக்கிறார் இயக்குனர் ஜியன் கிருஷ்ணகுமார்.