ராதாரவி நடித்த “இளைஞர் அணி” படத்தை இயக்கிய இயக்குநர் கே.ஆர் செல்வராஜ் (60) மாரடைப்பால் காலமானார். டப்பிங் யூனியன், பெப்சி செயலாளராக இருந்த இவர், முக்கிய அரசியல் தலைவர்களுடன் மிக நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். அவரது உடலுக்கு நடிகர் சங்க துணை தலைவர் பூச்சி முருகன் அஞ்சலி செலுத்தினார். அவரது மறைவிற்கு சினிமா நட்சத்திரங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.