மும்பையில் கால் டாக்சி டிரைவர் ஒருவருக்கும், பெண் பயணி ஒருவருக்கும் இடையே கட்டணம் தொடர்பாக ஏற்பட்ட கடும் வாக்குவாதம் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் பெண் தான் சென்ற பயணத்திற்கான 250 ரூபாய் கட்டணத்தைச் செலுத்த மறுத்துவிட்டு, டிரைவரைத் தரக்குறைவாகப் பேசிவிட்டு அங்கிருந்து நடக்கத் தொடங்கினார்.
விடாமல் துரத்திய டிரைவர், “மேடம், கட்டணத்தைக் கொடுத்துவிட்டுப் போங்கள்” எனக் கெஞ்சியும், அந்தப் பெண் “போடா.. என்ன காசு வேணும் உனக்கு?” என ஏக வசனம் பேசியது காண்போரை அதிர வைத்துள்ளது.
कैब ड्राइवर चिल्ला रहा है- मैडम पैसा कौन देगा ?
महिला- अबे चल निकल, काहे का पैसा ?वायरल वीडियो में महिला का व्यवहार बहुत अजीब है. pic.twitter.com/rSx37CrRuj
— Priya singh (@priyarajputlive) December 30, 2025
இடையே புகுந்த ஒரு பைக் பயணி சமாதானம் செய்ய முயன்றபோது, டிரைவர் தனது குமுறலைக் கொட்டினார். “வண்டிக்குள் சிகரெட் பிடித்தார், மது வாங்கச் சொல்லி வற்புறுத்தினார், அரை மணி நேரம் எனது நேரத்தை வீணடித்தார்; இப்போது காசு கேட்டால் தரமாட்டேன் என்கிறார்” என டிரைவர் குற்றம் சாட்டினார்.
மேலும், தான் ஒரு பெண் என்பதை வைத்து அனுதாபம் தேட முயல வேண்டாம் (Woman Card) என்றும் அந்த டிரைவர் ஆவேசமாகப் பேசினார். நீண்ட நேரமாகத் தொடர்ந்த இந்த சண்டையின் முடிவில் அந்தப் பெண் காசு கொடுத்தாரா இல்லையா என்பது தெரியவில்லை என்றாலும், அந்த டிரைவருக்கு ஆதரவாக இணையத்தில் கருத்துகள் குவிந்து வருகின்றன.
