திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் ஏராளமான பக்தர்கள் காணிக்கை செலுத்துவது வழக்கம். அப்படி காணிக்கை செலுத்தும் பணம், நகை மற்றும் பொருட்கள் போன்றவற்றை இதுவரை கோவிலுக்குள் வைத்து கணக்கிட்டு வந்தனர். இந்நிலையில் இன்று முதல் காணிக்கையாக செலுத்தப்படும் நகை மற்றும் பொருட்களை கோவிலுக்கு வெளியே கட்டப்பட்டுள்ள கட்டடத்தில் எண்ணப்படுகிறது. இதற்காக கோவில் உண்டியல் அண்டாக்கள் லாரியில் பணம் எண்ணும் கட்டிடத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனையடுத்து  காலை 11 மணிக்கு நடைபெறும் சிறப்பு பூஜைக்கு பின் காணிக்கை எண்ணும் பணி தொடங்கியுள்ளது. பக்தர்களின் காணிக்கை கோவிலுக்கு வெளியே வைத்து எண்ணப்படுவது தேவஸ்தான வரலாற்றிலேயே இதுவே முதல் முறையாகும்.