நாடு முழுவதும் ஆன்லைன் வர்த்தக முறையானது ஆண்ட்ராய்டு போன்கள் வழியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் தற்போது otp பைபாஸ் மோசடிகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஓடிபி மூலமாக அதிகமான அளவில் மோசடிகள் நடைபெற்று வருகிறது. இந்த மோசடியை எப்படி தடுப்பது என்று பார்க்கலாம். அதாவது முதலில் செல்போனுக்கு வரும் எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சலில் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக அதில் அனுப்பப்படும் எந்த ஒரு லிங்கை கிளிக் செய்வதோ அல்லது தெரியாத ஆப்களில் இருந்து இணைப்புகளை பதிவிறக்கம் செய்வதை வேண்டாம்.

அதேபோல தனிப்பட்ட தகவல் அல்லது ஓடிபியை யாரிடம் பகிர்ந்து கொள்ள கூடாது. சந்தேகத்திற்குரிய கால் அல்லது எஸ்எம்எஸ் வந்தால் உடனே வங்கி மற்றும் உள்ளூர் சட்ட அமலாக்கத்திற்கு புகார் அளிக்க வேண்டும். அதிகாரப்பூர்வ செயலிகளில் இருந்து மட்டுமே செயலிகளை பதிவிறக்க வேண்டும். அதேபோல பாதுகாப்பான வைபைகளை பயன்படுத்துவது நல்லது. வேறு நெட்வொர்க்கில் நிதி பரிவர்த்தனைகளை நடத்துவதை தவிர்க்க வேண்டும்.