பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் அங்கீகாரம் பல்கலை மானிய குழுவான யுஜிசி மூலமாக வழங்கப்பட்டு வருகின்றது. அதே சமயம் யுஜிசி விதிகளை மீறினால் பல்கலைக்கழகங்களுக்கு ஆராய்ச்சி மானியம் ரத்து செய்யப்படும் என்ற விதியும் உள்ளது. இதன்படி ஒவ்வொரு பல்கலைக்கழகமும் தங்களுக்கு கீழ் செயல்படும் கல்லூரிகளின் விவரங்கள் நடத்தும் படிப்புகள், சிண்டிகேட் சென்ட் உறுப்பினர் பட்டியல் பாடத்திட்டம் ஆகியவற்றை இணையதளத்தில் குறிப்பிட வேண்டும்.

ஆனால் சில பல்கலைக்கழகங்கள் தங்கள் இணையதளத்தை முறையாக பராமரிக்காமல் அலட்சியமாக இருப்பதால் இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி குறிப்பிட்ட கால இடைவெளியில் பல்கலைக்கழகங்களின் தகவல்களை புதுப்பிக்க வேண்டும் என்றும் தவறினால் அங்கீகார விதிப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.