இந்தியாவில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளும் யூசிஜி கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த நிலையில் யூசிஜி விதித்துள்ள விதிகளை மீறினால் அந்த பல்கலைக்கழகங்களுக்கு ஆராய்ச்சி மானியம் ரத்து செய்யப்படும் என்று யுஜிசி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தற்போது விதிகளின்படி ஒவ்வொரு பல்கலைக்கழகங்களும் தங்களுக்கு கீழ் செயல்படும் கல்லூரிகளின் விவரங்கள் நடைமுறையில் உள்ள படிப்புகள் ,சிண்டிகேட் சேனல் உறுப்பினர் பட்டியல், பாடத்திட்டம் போன்றவற்றை இணையதளத்தில் குறிப்பிட வேண்டும்.

ஆனால் பல பல்கலைக்கழகங்கள் இந்த இணையதளத்தை முறையாக பராமரிக்காமல் இருப்பதாக புகார் எழுகிறது. இதனால் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில் குறிப்பிட்ட கால இடைவெளியில் பல்கலைக்கழகங்களின் தகவல்கள் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று உத்தரவு  பிறப்பித்துள்ளது. அவ்வாறு மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.