அமெரிக்க நாட்டில் தந்தை ஒருவர் தன் 6 வயது மகன் உறங்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன் செல்போனை கொடுப்பதை வாடிக்கையாக வைத்து உள்ளார். ஒருநாள் இவரின் இந்த பழக்கம் அவரை அதிர்ச்சியடைய வைத்தது. அதவாது, செல்போனில் கேம்களை விளையாடுவதற்கு பதில், சிறுவன் உணவு டெலிவரி செயலியை திறந்து, பல உணவகங்களில் இருந்து அதிக அளவிலான உணவை ஆர்டர் செய்துள்ளான்.
அதன்படி, 1000 அமெரிக்க டாலர்களுக்கு (சுமார் ரூ.82 ஆயிரம்) அச்சிறுவன் ஆர்டர் செய்துள்ளான். மிச்சிகன் மகாணத்தின் மெட்ரோ டெட்ராய்டிலுள்ள செஸ்டர்ஃபீல்ட் டவுன்ஷிப்பைச் சேர்ந்த சிறுவன், ஒரு சனிக்கிழமை இரவில் தன் தாயார் வீட்டில் இல்லாதபோது, Grubhub (Swiggy, Zomato போன்றது) உணவு விநியோக செயிலி வாயிலாக ஆர்டர் செய்தான். இந்நேரத்தில் தந்தை கீத் ஸ்டோன்ஹவுஸ், அவர் மகன் மொபைலில் கேம் விளையாடுவதாக கருதினார்.
அதோடு அச்சிறுவன் ஒவ்வொரு ஆர்டருக்கும் 25 சதவீதம் Tips கொடுக்கும் ஆப்ஷனையும் தேர்வு செய்துள்ளான். பின் காலிங்பெல் தொடர்ந்து அடித்துக்கொண்டே இருந்தது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு காராக வீட்டிற்கு வந்துகொண்டே இருந்தது. எனது வங்கிக் கணக்கை பார்த்தேன், அது குறைந்து கொண்டே வந்தது” என சம்பவத்தை விவரித்தார் ஸ்டோன்ஹவுஸ்.