வங்கக் கடலில் காய்ச்சலுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கக்கூடிய நிலையில் வரக்கூடிய டிசம்பர் 2ஆம்  தேதி புயலாகும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.  அந்த அடிப்படையில் டிசம்பர் 2 மற்றும் டிசம்பர் 3 ஆகிய தேதிகளில் தமிழகத்திற்கு ஆரஞ்சு அலட்…..  அதாவது கன முதல் மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

குறிப்பாக சென்னை மற்றும் அதனை ஒட்டிய அண்டை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த அடிப்படையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 2 மற்றும் 3ஆம் தேதிகளில் கன முதல் மிக கனமழை ( 11 சென்டிமீட்டர் முதல் 20 சென்டிமீட்டர் ) வரை மழை பதிவாக வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல அன்றைய தினம் பல்வேறு மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. ராணிப்பேட்டை, கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும் பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் சென்னையை ஒட்டிருக்கக்கூடிய அண்டை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள்,  வங்க கடலை ஓட்டிருக்கக்கூடிய கடலோர கடலூர் மாவட்டங்களில் நல்ல மழைப்பொழிவை எதிர்பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.