கடந்த 26 ஆம் தேதி வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல சுழற்சியானது நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியிருந்தது. தொடர்ந்து அது இன்றைய தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து இருக்கக்கூடிய நிலையில் இது மேற்கு வட மேற்கு திசைகளில் நகர்ந்து, 30ஆம்   தேதி காய்ச்சலுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

அதனை தொடர்ந்து அதற்கடுத்த 48 மணி நேரம் அதாவது,  டிசம்பர் 2 மற்றும் 3ஆம் தேதி மேற்கு வட மேற்கு திசைகளில் நகர்ந்து தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் புயலாக வலுவடைய கூடும்.  இதனால் தமிழகத்திற்கு  நல்ல மழைப்பொழிவை நாம் எதிர்பார்க்கலாம். குறிப்பாக சென்னை  ஒட்டி இருக்க கூடிய  அண்டை மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 2 மற்றும் 3ஆம்  தேதிகளில் ஐந்து மாவட்டங்களில் ஆரஞ்சு அலெர்ட்  ஆனது  விடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்று சொன்னால்,  திருவள்ளூர் – சென்னை – காஞ்சிபுரம் – செங்கல்பட்டு – விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும்,  ராணிப்பேட்டை – கடலூர் – மயிலாடுதுறை – திருவாரூர் – நாகை – தஞ்சை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழையும் பெய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.