
மத்திய பாஜகவுடன் அதிமுகவுக்கு நெருக்கமாக இருக்கிறது. மாநில பாஜக அதிமுகவுக்கு எதிர்ப்பாக இருப்பதாக தெரிகிறததே என்ற கேள்விக்கு, பதிலளித்த தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, எதிர்ப்பாக இருக்கின்ற மாதிரி தெரியுது தானே… நீங்களே பதில் சொல்லிட்டீங்க.
நாங்க என்ன பதில் சொல்லுவது ? உங்களுடைய கேள்வியிலேயே பதில் அடங்கிவிட்டது என்று சிரித்துக் கொண்டே பதிலளித்தார். தமிழகத்தின் இரும்பு மனிதர் என்று உங்களை பாஜகவினர் ஏற்றுக் கொள்வார்களா ? மோடி – அமித்ஷாவும் அதிமுக மாநாட்டிற்கு வருகின்றார்களா ? என்ற கேள்விக்கு, இது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மாநாடு கட்சி மாநாடு. இது கூட்டணி கட்சி மாநாடு அல்ல என விளக்கம் அளித்தார்.