செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் கௌதமன்,  இந்திய ஒன்றியத்தில்…  சொல்லப்போனால் இந்த உலகத்துல…  எங்கேயுமே நடக்காத ஒரு பெரும் துயரம். ஒரு பெரும் ரணம். தமிழ்நாட்டில் மட்டுமே நடந்து கொண்டிருக்கின்றது அல்லது நடத்தப்பட்டு கொண்டு இருக்கிறது.  அதாவது எந்த நாட்டிலும் ? எந்த மாநிலத்திலும் ? படிக்கின்ற எங்கள் வீட்டுப்பிள்ளைகள் கொத்து கொத்தாக சாகிறது என்கிறது எங்கேயுமே நடக்கல.

இந்திய ஒன்றியமும் வேடிக்கை பார்க்குது, தமிழ்நாடு அரசும் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. நடந்து கொண்டிருக்கின்ற தற்கொலை என்று சொல்லுகின்ற இந்த பச்சை படுகொலையை விட கொடூரமான வன்முறை எதுனா…  இந்த வேடிக்கை பார்க்கிறதுதான். சாகசாக இன்னும் சாகுங்க அப்படின்னு இந்தியா ஒன்றிய அரசு அதை எல்லாம் ஒரு கொண்டாட்டத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறது.

மோடி அவர்களுக்கு இத பத்தி தெரியாதா ? அல்லது தமிழ்நாடு அரசை ஆண்டு கொண்டு இருக்கின்ற ஸ்டாலின் அவர்களுக்கு இந்த வலியெல்லாம் தெரியாதா ?எங்கள் வீட்டுப்பிள்ளைகள்  20வதுக்கும் மேற்பட்டவர்கள் நீட் என்ற எமனுக்கு நாங்க பலி கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இப்ப எங்கள் வீட்டுப்பிள்ளைகள் சாக கூடவே,  எங்கள் பிள்ளைகளைப் பெற்றவர்களும் சாகுவது என்பது இந்த பாவமும்,  இந்த சாபமும் ஒருநாளும் சும்மா விடாது என தெரிவித்தார்.