தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பிளஸ் ஒன் மாணவர்களுக்கு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு நடத்தப்பட்ட ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு பிளஸ் 1 மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் இந்த தேர்வில் 500 மாணவர்கள் மற்றும் 500 மாணவிகள் என மொத்தம் ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உதவி தொகையாக ஒரு கல்வியாண்டுக்கு மாத ஆயிரம் ரூபாய் என்ற விகிதத்தில் பத்து மாதங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் இளங்கலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்த தேர்வு செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இதற்கு ஆகஸ்ட் 7 முதல் ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் தேர்வுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள பள்ளி மாணவர்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகஸ்ட் 14 முதல் ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. பதிவேற்றம் முடிந்த பிறகு தேர்தலின் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம் மற்றும் தேர்வு கட்டண செலுத்தும் சீட்டு சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலரிடம் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் ஒப்படைக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.