மதிமுகவின் மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, 30 ஆண்டுகள் ஏறத்தாழ கடந்து விட்டன. நான் ”கலிங்கபட்டி” என்ற சின்ன கிராமத்தில் பிறந்த போது… நான் ஒரு அரசியல் கட்சியை தொடங்குவேன் என்றோ,  அப்படி ஒரு கட்சியை இயக்குவேன் என்றோ நான் கனவு கூட கண்டதில்லை.

நான் பேரறிஞர் அண்ணாவின் உடைய உரையை கேட்டு…  டாக்டர் கலைஞரின் உரையை கேட்டு… சிந்தனை சிற்பி சிந்தனை செல்வம் உரையை கேட்டு…  ஏ.பி.பி ஆசை தம்பியின் உரையை கேட்டு…  நான் என்னை திராவிட முன்னேற்றக் கழகத்திலே கல்லூரி மாணவனாக ஒப்படைத்துக் கொண்ட போது 1964 ஆகஸ்ட் திங்கள். மறுநாள் எனக்கு நன்கு நினைவு வருகிறது.

அண்ணாவின் உடைய முன்னாலே பேசி விட்டு…  அந்த இரவிலே நுங்கம்பாக்கம் வீட்டில் நன்றாக பேசினாய் என்று அண்ணா அவர்கள் பாராட்டு கிடைத்தது. நான் படிக்கும் போது சுதந்திர தின நாளுக்கான கூட்டத்தை..  மாணவ கூட்டத்தை பல்கலைக்கழகங்களில் இருந்து ஏற்பாடு செய்தார்கள். பல்லாயிரக்கணக்கான மாணவர்களை ஓர் இடத்திலே சேர்த்து வைத்த போது,  அந்த கூட்டத்திலேயே நன்றி சொல்வதற்கு…

வரவேற்பு உரையாற்றுவதற்கு ஒரு மாணவன் வேண்டுமென்று அன்றைய பல்கலைக்கழகத்தினுடைய துணைவேந்தர் சுந்தர வடிவேலு  மாநிலக் கல்லூரியினுடைய முதல்வராக இருந்த பிஜிஎஸ் சுவாமிக்கு தகவல் அனுப்பினார். ஒரு நன்கு பேசக்கூடிய ஒரு மாணவனை பெருந்தலைவர் காமராஜருக்கு முன்னாலே பேசுவதற்கு அனுப்பி வையுங்கள் என்று அங்கே இருந்து தகவல் அனுப்பினார்.

என்னை அழைத்து பிஜிஎஸ் சாமி சொன்னார்…  இது பெருந்தலைவர் காமராஜர்  கலந்து கொள்கிற கூட்டம்.  மாணவர்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு இருப்பார்கள். இப்படி ஒரு வாய்ப்பு வாழ்க்கையிலே கிடைக்காது. நீ போய் பேசி விட்டு வா என்று சொன்னார்கள்.

நான் பத்து நிமிடம் பேசினேன் அந்த கூட்டத்தில்…  பெருந்தலைவர் அவர்கள் 10 நிமிடம் தான் பேசினார். மறுநாள் காலை 9 மணிக்கு கதிர் ஜிப்பா போட்டவராக…  சிவத்த நிறத்தோடு ஒருவர் என்னுடைய அறைக்கு வந்தார். விக்டோரியா விடுதிக்கு..  வாருங்கள் ஐயா,  உட்காருங்கள் நீங்கள் யார் என்று கேட்டேன் ?  என் பெயர் மஜித்.

நான் காங்கிரஸ் கட்சியின்  இளைஞர்கள் காங்கிரஸ்ஸின் தலைவராக இருக்கிறேன். நேற்றைக்கு நீங்கள் பேசிய பேச்சு தலைவரை கவர்ந்து விட்டது. பெருந்தலைவரை கவர்ந்து விட்டது… ஆகவே நீங்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாருங்கள்,  உங்கள் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்று கூறிய போது….  நான் குறிப்பிட்டேன்,

நான் ஆறாவது வகுப்பு படிக்கும் போதே என் வீட்டிற்கு காமராஜர் வந்து தங்கினார், உணவு அருந்தினார், ஓய்வெடுத்தார், நான் காங்கிரஸ் குடும்பத்தில் இருந்து வந்தவன் தான். ஆனால் நான் காங்கிரஸ் கட்சிக்கு வரமாட்டேன். பெருந்தலைவர் அழைப்புக்காக வரமாட்டேன், நான் திராவிட முன்னேற்றக் கழகத்திலேயே என்னை இணைத்துக் கொண்டேன் என தெரிவித்தார்.