
ஜம்மு-காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் அமைக்கப்பட்டிருந்த 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 27 நிமிடங்கள் நடந்த இந்த தாக்குதலில் 100 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சீன அரசின் குளோபல் டைம்ஸ் செய்தி நிறுவனம் ஆபரேஷன் சிந்தூர் குறித்து பொய்யான செய்தியை பரப்பியதாக கூறப்படுகிறது. அதாவது இந்திய போர் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த செய்தி வைரலான நிலையில் இந்தியா குளோபல் டைம்ஸ் செய்தி நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. ஒரு செய்தியை வெளியிடும் முன்பு உண்மையை ஆராய வேண்டும். பொறுப்பான ஊடகமாக செயல்பட வேண்டும் என்று இந்தியா தெரிவித்துள்ளது. மேலும் “ஆபரேஷன் சிந்தூர்” குறித்து பாகிஸ்தான் ஆதரவாளர்கள் பலர் வதந்தி பரப்பி வருவதாக கூறியுள்ளது.