தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் வெற்றிமாறன். இவர் தற்போது நடிகர் சூரியை வைத்து விடுதலை என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகும் நிலையில்  படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விடுதலை படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது விடுதலைப் படத்திற்கு கிடைத்துள்ள சென்சார் சான்றிதழ் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது விடுதலை படத்தை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் பார்க்கும் படியான ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. விடுதலை படத்தில் நிறைய வன்முறை காட்சிகள் இருக்கும் என்பதால் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 30 நிமிடங்கள். மேலும் இந்த படம் மார்ச் 31-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.