தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் வைத்து பின்னணி பாடகர் டி.எம் சௌந்தரராஜன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள மேற்கு வட்ட சாலைக்கு வைக்கப்பட்டுள்ள டி.எம் சௌந்தரராஜன் பெயர் பலகை அடங்கிய காணொளி காட்சியை திறந்து வைத்தார். தமிழ் திரையுலகில் பிரபலமான பாடகராக இருந்த டி.எம் சௌந்தர்ராஜன் 10,000-க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.

இவருக்கு கடந்த 1970-ம் ஆண்டு கலைஞர் கருணாநிதியால் ஏழிசை மன்னர் என்ற பட்டம் வழங்கப்பட்டது. மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த டி.எம் சௌந்தரராஜன் கடந்த 2013-ஆம் ஆண்டு மே மாதம் 25-ஆம் தேதி மறைந்தார். மேலும் இவரது நூற்றாண்டில் நாளை முன்னிட்டு அவரை பெருமைப்படுத்தும் விதமாக டி.எம் சௌந்தரராஜனின் பெயர் சாலைக்கு வைக்கப்பட்டுள்ளது. ‌