தமிழ் சினிமாவில் பிதாமகன், கஜேந்திரன் மற்றும் மாயாவி போன்ற பல படங்களை தயாரித்த தயாரிப்பாளர் வி.ஏ துரை தற்போது சொத்து மொத்தத்தையும் இழந்து உடல்நல குறைவினால் அவதிப்பட்டு வருகிறார். இவர் தனக்கு உதவி செய்யுமாறு அண்மையில் வீடியோ வெளியிட்டிருந்த நிலையில் நடிகர் சூர்யா ஒரு லட்ச ரூபாய் கொடுத்து உதவினார். அதன் பிறகு நடிகர் ரஜினி தனக்கு உதவ வேண்டும் என தயாரிப்பாளர் வி.ஏ துரை கோரிக்கை விடித்திருந்த நிலையில், அவருக்கு உதவி செய்வதாக ரஜினியும் வாக்குறுதி கொடுத்திருந்தார்.

இந்நிலையில் கொடுத்த வாக்குறுதியின் படி நடிகர் ரஜினி வி.ஏ துரையின் மொத்த மருத்துவ செலவு மற்றும் மருந்து செலவுகளை ஏற்றுக் கொள்வதாக கூறியுள்ளார். அவரிடம் மொத்தமாக பணத்தை கொடுத்தால் சரி வராது என்று நினைத்த ரஜினி மருத்துவ செலவு மற்றும் மருந்து செலவு போன்றவற்றை ஏற்றுக் கொள்வதாக கூறியுள்ளார். இதனால் தயாரிப்பாளர் வி.ஏ துரை மீண்டும் பழைய நிலைமைக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தயாரிப்பாளர் துரைக்கு ரஜினி உதவியதற்காக அவரை தற்போது பலரும் பாராட்டி வரும் நிலையில் சூப்பர் ஸ்டார் என்றுமே சூப்பர் ஸ்டார் தான் என்பதை நிரூபித்து விட்டார் என்று ரசிகர்கள் புகழாரம் சொல்கிறார்கள்.