பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் தன் ஆன்லைன் வீட்டுக்கடன் விண்ணப்பத்தினை வாட்ஸ்அப்-ல் அறிமுகப்படுத்தி இருப்பதாக அறிவித்தது. அதாவது, ஏற்ற அளவுக்கு சம்பளம் வாங்குபவர்கள் ஒரு சில விவரங்களை சமர்ப்பிப்பதன் வாயிலாக எங்கிருந்தும், எந்நேரத்திலும் வீட்டுக்கடனுக்கு விண்ணப்பிக்கலாம். புது வீட்டுக்கடன் மற்றும் வீட்டுக்கடன் இருப்பு பரிமாற்றம் ஆகிய இரண்டிற்கும் சம்பளம் பெறும் விண்ணப்பதாரர்கள் வாட்ஸ்அப் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

பயன்பாட்டுக்கு உங்களுடைய பெயர், மொபைல்எண், பான் ஆகிய சில விபரங்கள் மட்டுமே தேவை. அதோடு உங்களது தகுதி மற்றும் சலுகை தொகையை உடனே சரிபார்க்கலாம். டிஜிட்டல் கொள்கை அனுமதி கடிதத்தை பெற ஆர்வம் இருப்பவர்கள் பெயரளவு தொகையாக ரூ.1,999+ GST தொகையை செலுத்தவேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும் (அ) 75075 07315 என்ற எண்ணை சேவ் செய்து “ஹாய்” என அனுப்பவும். உங்களது வீட்டுக்கடன் தகுதியை சரிபார்த்து உடனே சலுகை வழங்க 8 விவரங்களை மட்டும் (பெயர், தொடர்பு எண்கள், PAN போன்றவை) சமர்ப்பிக்கவும். ரூ.1,999+GST மட்டும் செலுத்தி டிஜிட்டல் கொள்கை அனுமதி கடிதத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் வீட்டுக்கடன் வட்டி வருடத்திற்கு 8.60 சதவீதத்திலிருந்து துவங்குகிறது. சம்பளம் மற்றும் தொழில் முறை விண்ணப்பதாரர்கள் கடன் வாங்குவோர் தங்களது வட்டிவிகிதத்தை ரெப்போ விகிதத்துடன் இணைக்கும் விருப்பத்தை அனுமதிக்கின்றனர்.