சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள பகுதியில் தமிழ்மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பட்டப்படிப்பு படித்துள்ளார். இவருக்கு திருமணமாகி 4 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இதற்கிடையில் இவர் சில ஆண்டுகளாக ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்துள்ளார். இதற்காக அவர் தனியார் நிறுவனங்களில் கடன் வாங்கி, ஆன்லைன் ரம்மியில் விளையாடி பணத்தை இழந்து உள்ளார்.

இதனால் கடனை கட்ட முடியாமல் மன உளைச்சலில் இருந்த தமிழ்மணி கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக மதுபானத்தில் விஷத்தை கலந்து குடித்துள்ளார். இதையடுத்து அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிர் இழந்தார். இதையடுத்து அவரது மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.