கரூர் மாவட்டத்தில் உள்ள பாலவிடுதி அருகே இருக்கும் ஆறுமுகத்தான் தெருவில் காளியப்பன் என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான காளியப்பன் தாந்தோணிமலை கிராம நிர்வாக அதிகாரி விஜடை சந்தித்து நில பிரச்சனை குறித்து மனு அளித்துள்ளார். இதனை தொடர்ந்து மனு குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி காளியப்பன் விஜயை தகாத வார்த்தைகளால் திட்டி பணி செய்ய விடாமல் தடுத்ததாக தெரிகிறது.

மேலும் காளியப்பன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதுகுறித்து விஜய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் காளியப்பனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.