
காவேரி விஷயத்தில் எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், நான் வந்தது நடிகர் திலகம், உலகப் பெரும் புகழ் சிவாஜி கணேசன் அவர்களின் 95வது அகவை நினைவு கூறும் நாளுக்கு வந்துள்ளேன். தண்ணிங்கிறது உலகப் பொதுமறை மாறி. உயரமா ஒரு இடத்துல தொடங்குற தண்ணீர் கடை நிலை கடல்ல போய் கலக்குற வரைக்கும். அது எந்த நாடு ? எந்தெந்த ஊர் ? எந்தெந்த மொழி ? எல்லா மாநிலங்களுக்கும்…. எல்லா நாடுகளுக்கும்…
அதில் உள்ள விலங்குகள்…. உயிர் ஜீவனங்கள்…. மனிதர்கள் என எல்லாத்துக்கும் பொதுவானது தான் தண்ணி. அத வச்சு அரசியல் பண்ணிட்டு இருக்கிறது அயோக்கியத்தனம், மடத்தனம், முட்டாள்தனம். இதை எல்லோருமே செஞ்சிட்டு இருக்காங்க.
நீங்க போய் ஒரு ஹெலிகாப்டர் எடுத்து போங்க. அப்படியே கடல் மாதிரி தக தக என்று தான் எல்லா டேம்லயும் கர்நாடகாவில் தண்ணீர் மிதக்குது. ஒரு சொட்டு கூட கொடுக்க மாட்டேன்னு சொல்றது. அப்புறம் எதுக்கு சொல்றீங்க ? ஒரே நாடு… ஒரே வெங்காயம் என்று ஏன் பேசுறீங்க என ஆவேசமானார்.