தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்த பின் செய்தியாளரிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்,  ஆளுநர் அவர்களை கேப்டன் ஆணைக்கிணங்க தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக சந்திக்க வந்திருக்கின்றோம். ஆளுநரை எதற்காக சந்தித்தோம் அப்படிங்கறது ? முதல்ல உங்ககிட்ட சொல்றேன்…

1.) நமது காவேரியில் தமிழகத்திற்கு வேண்டிய உரிமையை பெற்று தருவதற்கு மத்திய அரசு உடனடியாக செவி சாய்த்து,  நமது விவசாய பெருமக்களுக்கு வேண்டிய உரிமையை தர வேண்டும் என்று நான் கேட்டு இருக்கேன். இது நிரந்தரமாக தீர்வு  பெற வேண்டும் என்றால் ? நதிகள் இணைப்பு ஒன்றுதான் சாத்தியம். அதற்கு உடனடியாக மத்திய – மாநில அரசுகள் செவி சாய்த்து,  அத்தனை தேசிய நதிகளை இணைக்கனும்னு நாங்க வேண்டுகோள் விடுத்திருக்கின்றோம்.

2.) என்எல்சி பிரச்சனை பல ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. என்எல்சியில் நமது தொழிலாளர்கள் நிலத்தை கொடுத்துட்டு வேலையில்லாமல், ஊதியம் இல்லாமல், பணி நிரந்தரம் இல்லாமல், எத்தனையோ ஆண்டு காலமாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த NLCஇல் அவர்களுக்கு உரிய உரிமையை பெற்று தர வேண்டும். அந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட வேண்டும் என்பதை நான் கேட்டிருக்கிறோம்.

3.) நமது மீனவ மக்கள் இன்றைக்கும் பாருங்க கடலுக்கு சென்று அவங்க சரியான முறையில் அவங்க தொழிலை செய்ய முடியாமல் தடுக்கப்படுகிறார்கள்.  அவர்களுடைய உயிருக்கோ, உடைமைக்கோ இன்னைக்கும் பாதுகாப்பு இல்லாத ஒரு நிலைமை இருக்கு. எனவே மீனவர்கள் பிரச்சனைக்கும் நிரந்தரமாக தீர்வு ஏற்பட்டு, மீனவர்கள் தைரியமாக அவர்கள் தொழில் செய்ய இந்த அரசு மத்திய – மாநில அரசுகள் நிச்சயம் செவி சாய்க்க வேண்டும் என்பதை கேட்டுக்கொள்கிறோம். அதற்கு நிரந்தர தீர்வு கச்சத்தீவை மீட்டெடுப்பது தான்.

4.) கனிம வளம் தான் ஒரு நாட்டினுடைய வளம். இன்னைக்கு  ஆயிரக்கணக்கான லாரிகள் பக்கத்து ஸ்டேட்டிற்கு… கேரளா –  கர்நாடகா –  ஆந்திரா என்று தமிழ்நாட்டின் வளங்களை இன்னைக்கு சுயநல அரசியல்வாதிகள் தமிழ்நாட்டில் இருக்கிறவங்க… தங்கள் சுயலாபத்துக்காக அத்தனை  கனிம வளத்தையும் கொள்ளையடிச்சு…  பக்கத்து ஸ்டேட்டிற்கு அனுப்புகிறார்கள். இது தடுக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் என தெரிவித்தார்.