செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், அரசியல் ஆதாயத்திற்காக பாஜக. கர்நாடகா அரசு ஏற்கனவே தண்ணீர் கொடுக்கணுமா ? இல்லையா ? என்று தடுமாறிட்டு இருக்கு. அந்த நேரத்துல தண்ணியே கொடுக்க கூடாதுன்னு அரசியல் ஆதாயத்திற்காக நீங்க பந்த் நடக்கிற போது,  அதற்கு கர்நாடக அரசு பணிவது ஏற்றுக்கொள்ளக்கூடியது இல்லை. ஒரு மாநில அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் செயல்பட வேண்டுமே தவிர,

யாராவது ஒரு நாலு பேரு பந்த்  நடத்துனதுக்காக நீங்க   பணிஞ்சு போயிடலாமா ? நாங்களுக்கு கர்நாடக முதலமைச்சர் ராஜினாமா பண்ண சொல்லி அவங்க பந்த்  நடத்தினா  பணிஞ்சிருவீங்களா..? இதெல்லாம் உச்ச நீதிமன்ற தீர்ப்பு. 50 ஆண்டுகாலம் போராடி பெற்ற பிறகும் கூட.  உரிய தண்ணீர் கிடைக்காமல் இன்றைக்கு குருவை 5  லட்சம் ஏக்கர்ல அழிஞ்சிருக்கு.

அடுத்து சம்பா சாகுபடி செய்ய முடியுமா ?  என்கின்ற நிலைமையே இல்லை. எனவே ஒன்றிய அரசு, காவிரி மேலாண்மை வாரியம் இதுல எல்லாம் நியாயமான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்று,  நான் இந்த நேரத்துல கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன் என தெரிவித்தார்.