செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி உரிய பிரதிநிதித்துவம் கொடு. யாருதை எடுத்து கொடுக்குற ? எண்ணி கொடு….  நீ ஏன் அள்ளி  கொடுக்குற ?  கூறு வைத்து விக்கிற மாதிரி… யாரு கவண்டரா ? இந்தா…  நீ யாரு ? நாடாரா இந்தா டா என .. அள்ளி கொடுக்காத… அளந்து கொடு ….  சாதி,  மதம் மோதல் வராது. எல்லாருக்கும் உண்டான கல்வி… எல்லாருக்கும் உண்டான வேலைவாய்ப்பு.. அதற்குக்கேற்ப ஊதியம்…. அதை கொண்டு வாழ்கின்ற பெருமை மிக்க வாழ்வு வந்துட்டா… என் மக்களுக்கு எதுக்கு இந்த சாதி கருமாந்திரம். கழட்டி விட்டு போயிட்டே இருப்பான்.

எனக்கு இப்போ என் தம்பி வசதியா வாழுறதுல பெருமை. என் தங்கச்சிக்கு கொடுத்துட்டீங்கனா.. பெருமை. எனக்கு வேண்டியது எனக்கு கிடைச்சிட்டுல .. தம்பி நான் உங்ககிட்ட கேக்குறேன்…. ஒரு அப்பத்தா இருக்கா.. ஒரு குடும்ப அட்டைக்கு 10 கிலோ அரிசி. அப்படி திட்டம் வருது. குடும்ப   அட்டைக்கு 10 கிலோ அரிசி.

ஒரே கிழவி அட்டையை காமிச்சி 10 கிலோ அரிசி வாங்கிட்டு வாரா. நாங்க ஒரு 6, 7 பேர் இருக்கோம் ஒரே வீட்டுல…  அதே 10 கிலோ அரிசி தான் குடும்ப அட்டைக்கு…. நல்லா கவனிக்கிறீங்களா….? இந்த ஒத்த கிழவிக்கு 10 கிலோ…  10 பேர் இருக்குற வீட்டுக்கும் 10 கிலோ தான் என்றால் ? இது உண்மையிலேயே நியாயமான பகிர்வா ? இல்ல சமூக நீதியா ? அநீதியா? அப்போ எண்ணி கொடு …எடுத்து கொடுக்காத… அள்ளிக்கொடுக்காத… அளந்துகொடு. இதான் எங்க கோட்பாடு.

அதற்கு தான் வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் சொல்லுறோம். அத சரியா கொடு என சொல்லுறோம். நீ குடிவாரி கணக்கெடுக்காம…  குண்டான் கோத்தரா  அவர் அவ்ளோ இருந்தார்… இவரு இவ்ளோ இருந்தார்….  ஏன் அப்படி சொல்லுற ? ஏன் அப்படி செய்யுற ? அது தான் தப்பு. குடிவாரி கணக்கெடுப்பை இப்போ பேசுறாங்க. அதுல நாம சிரிச்சிக்க வேண்டி இருக்கு. அப்போ இவளோ நாளு என கேள்வி எழுப்பினார்.