தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்த பின் செய்தியாளரிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்,  ஆளுநர் அவர்களை கேப்டன் ஆணைக்கிணங்க தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக சந்திக்க வந்திருக்கின்றோம். ஆளுநரை எதற்காக சந்தித்தோம் அப்படிங்கறது ? முதல்ல உங்ககிட்ட சொல்றேன்…  அதுக்கு முன்னாடி அனைத்து ஊடக சேனல்களுக்கும் எனது நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏனென்றால் நேத்து நான் பிரஸ் மீட்ல மக்கள் பிரச்சனையை நீங்கள் விவாதத்துக்கு கொண்டு வரணும்னு சொன்னேன்.  நேத்து அனைத்து ஊடகங்களிலுமே விவாதத்தில் நம்முடைய காவிரி பிரச்சனையை நீங்கள் கொண்டு வந்து, விவாதித்தது உண்மையிலேயே நமது தமிழர்களுக்காக நீங்கள் செய்த மிகப்பெரிய விஷயம். அதற்காக முதலில் ஊடகங்களுக்கு எனது நன்றியை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதை தொடர்ந்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், காவேரி பிரச்சனையில் நிரந்தர தீர்வு கிடைக்க தேசிய நதிகளை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆளுநரிடம் வைத்துள்ளோம்.  அதேபோல் என்எல்சி பிரச்சனையை தீர்க்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,  மீனவர்களை பாதுகாக்க கச்சத்தீவை தமிழகத்திற்கு மீட்டு தர வேண்டும் என்றும், தமிழகத்தில் நடைபெறும் கனிமவள கொள்ளைகளை தடுக்க வலியுறுத்தியும் நாங்கள் ஆளுநரிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என தெரிவித்தார்.