செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், ஒரு மாநில அரசு ஏதோ கந்துவட்டி நடத்துற மாதிரி சூட்சத்தை செய்வது என்ன அரசியல் நாகரீகம் ? ஒரு மாநில அரசு இப்படி செய்யலாமா ? காவேரி மேலாண்மை ஆணையம் எதுக்கு இருக்கு ? காவேரி ஒழுங்காற்றுக் குழு எதுக்கு இருக்கு ? இதையெல்லாம் கண்காணிக்காம ஏன் இருக்காங்க?  அணைக்கு வருகின்ற தண்ணீரை தடுத்து  பயன்படுத்துவதை ஏன் காவேரி மேலாண்மை ஆணையம் தடுக்க மாட்டேங்குது ?

ஏன் ஒழுங்காற்று குழு தடுக்க மாட்டேங்குது ? இணைக்கு 3000 அடியாக குறைக்குறாங்க.  இது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.  தமிழ்நாட்டில் நாங்க உட்பட எல்லா விவசாய சங்க அமைப்புகளும் கலந்து பேசிக் கொண்டிருக்கின்றோம்…  விரைவிலே பந்த் உட்பட பல போராட்டங்களை டெல்டா மாவட்டங்களில் அறிவிக்கப்படும் என்கின்ற முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. அதற்கான தேதி மத்ததெல்லாம் விவசாய சங்க தலைவர்கள் அறிவிப்பாங்க.

நாங்க என்ன சொல்ல விரும்புறோம்னா….  உச்சநீதிமன்றம் தீர்ப்பு வந்த பிறகும் கூட…. நாங்க பந்த் நடத்தி….. போராட்டம் நடத்தி… உண்ணாவிரதம் நடத்தி தான் நாங்க தண்ணியை வாங்கணுமா…. அப்படின்னா….  மத்திய அரசு எதுக்கு ? நீதிமன்ற தீர்ப்புக்கே இந்த கதி என்றால் ? நாட்டில் எதை நம்பி செயல்படுவது. எனவே இந்த போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது.

அதிலும் குறிப்பாக….  அரசியல் ஆதாயத்திற்காக பாஜக. கர்நாடகா அரசு ஏற்கனவே தண்ணீர் கொடுக்கணுமா ? இல்லையா ? என்று தடுமாறிட்டு இருக்கு. அந்த நேரத்துல தண்ணியே கொடுக்க கூடாதுன்னு அரசியல் ஆதாயத்திற்காக நீங்க பந்த் நடக்கிற போது,  அதற்கு கர்நாடக அரசு பணிவது ஏற்றுக்கொள்ளக்கூடியது இல்லை என தெரிவித்தார்.