தமிழகத்தில் இந்த ஆண்டிற்கான முதல் சட்டசபை கூட்டம் நடைபெறுகிறது. இன்று 5ஆவது நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர்களின் துறை சார்ந்த கேள்விகளுக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதிலளித்தனர். அதன்படி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மாதாந்திர மின்கட்டணம் எப்போது கணக்கிடப்படும்? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது,”மிகக் குறைவான கட்டணம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் பெறப்படுகிறது”. தமிழ்நாட்டில் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இவை அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைக்கு வந்த பின் மாதாந்திர மின் கட்டண முறை அமல்படுத்தப்படும். மாதம் ஒருமுறை மின்கட்டணம் என்ற வாக்குறுதியை ஆளும் தமிழக அரசு நிச்சயம் நடைமுறைப்படுத்தும். இவ்வாறு அவர் பதிலளித்தார்.