பெரிய ஊக்க உரைகளோ அல்லது பகட்டான வாழ்க்கை முறையோ இன்றி, ஒரு சாதாரண பாதுகாப்புப் பணியாளர் (Security Guard) தனது உழைப்பால் உயர்ந்த கதையைப் பகிரும் வீடியோ ஒன்று இணையதளத்தில் பலரது இதயங்களை வென்றுள்ளது.
சென்னையில் வசிக்கும் ‘பிகி நந்தி’ (Biki Nandi) என்ற இளைஞர், கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் தற்போது 2026-ஆம் ஆண்டு வரை தனது ஐந்து ஆண்டுகால சம்பள உயர்வை ஒரு வீடியோவாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். எந்த ஒரு ஆடம்பரமும் இன்றி, மிகவும் எளிமையான முறையில் அவர் தனது முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளார். அவர்
-
2021: ரூ. 13,000/- (தொடக்க ஊதியம்)
-
2022: ரூ. 15,000/-
-
2023: ரூ. 18,000/-
-
2024: ரூ. 24,000/- (பெரிய முன்னேற்றம்)
-
2025: ரூ. 26,000/-
-
2026: ரூ. 32,000/- (தற்போதைய ஊதியம்)
ஒவ்வொரு ஆண்டும் தான் பணிபுரியும் சீருடையில் நின்றபடி, அந்தந்த காலகட்டத்தின் புகைப்படங்களை அவர் கோர்த்து வழங்கிய விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது. வெறும் இரண்டே நாட்களில் 30 லட்சத்திற்கும் (3 Million) அதிகமானோரால் இந்த வீடியோ பார்க்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் கார்ப்பரேட் துறையில் பணியாற்றுபவர்கள் கூட, “எங்கள் நிறுவனங்களில் கூட இவ்வளவு நேர்த்தியான ஊதிய உயர்வு இல்லை என ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram
“நண்பா, உனது வளர்ச்சி ஒரு பார்மா நிறுவன ஊழியரின் வளர்ச்சியை விடச் சிறப்பாக உள்ளது” என்றும், “வேலை மாறுவதால் கிடைக்கும் வெற்றி இது” என்றும் இணையவாசிகள் பிகி நந்தியை வாழ்த்தி வருகின்றனர். மேலும் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் பலரும், “அண்ணே, உங்கள் நிறுவனத்தில் எனக்கும் ஒரு வேலை வாங்கித் தாருங்கள்” எனக் கேட்குமளவிற்கு இந்த எளிய மனிதனின் வளர்ச்சி பலருக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.
