உலகிலேயே மிகக் கொடிய நோய்களில் மிக முக்கியமான ஒன்று மாரடைப்பு ஆகும். எவ்வளவு கொடிய நோயாக இருந்தாலும் அதிலிருந்து தப்பித்து விடலாம் ஆனால் மாரடைப்பு வந்தால் அடுத்த நொடியே உயிர் போய்விடுகிறது. ஒருசிலரோ குறிப்பிட்ட நேரத்தில் சரியான முதலுதவி சிகிச்சை கொடுப்பதால் உயிர் பிழைக்கிறார்கள். சமீபகாலமாகவே இந்தியாவில் நாளுக்கு நாள் வயது வித்தியாசமின்றி  மாரடைப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அந்தவகையில் புனே மாவட்டத்தில் உள்ள வானவாடியில் 9ஆம் வகுப்பு மாணவன் வேதாந்த்(14) கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதுகுறித்து அவரது நண்பர்கள் வேதாந்த்தின் தந்தைக்கு தகவல் தெரிவித்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வேதாந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். மாரடைப்பு காரணமாக வேதாந்த் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.