நாடு முழுவதும் அரசுத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களின் ஓய்வு காலத்திற்கு பிறகு ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுகிறார்கள். இதனால் லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் நாட்டின் லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்களுக்காக மத்திய அரசு முக்கிய முடிவை எடுத்துள்ளது.

ஓய்வூதியத்திற்காக மக்கள் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டி உள்ளதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து ஓய்வூதியத் தேதியை நிர்ணயிக்க, EPFO முடிவு செய்தது. அதன்படி, இனி ஒவ்வொரு மாதத்தின் கடைசி வேலை நாளிலும் ஓய்வூதியத் தொகை அனைத்து ஓய்வூதியதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.