சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 65,560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு ஒரு கிராம் 8,195 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் உயர்ந்து ஒரு கிராம் 8940 ரூபாய்க்கும், ஒரு சவரன் 71,520 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு கிராம் 111 ரூபாய்க்கும்,ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
