இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 104 ஆக இருந்த நிலையில், இன்று 114 பேர் கொரோனவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 86 ஆயிரத்து 154 ஆக இருக்கிறது.

தொற்று பாதிப்பில் இருந்து 144 பேர் நலமடைந்துள்ள நிலையில், 2,119 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் தொற்று பாதிப்பால் உயிரிழப்புகள் எதுவும் இல்லாத நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 5,30,726 ஆக இருக்கிறது.