நேபாளத்தில் உள்ள பொக்காரா விமான நிலையத்தை நோக்கி 72 பேருடன் விமான பயணிகள் சென்று கொண்டிருந்தனர். இந்த விமானம் தரையிறங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக பெரும் விபத்து ஏற்பட்டு தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 72 பேர் உயிரிழந்த நிலையில் 68 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நபர்களின் சடலங்களை மீட்கும் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த விமான விபத்து தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், மீதம் உள்ள நபர்களின் உடல்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த கருப்பு பெட்டி ஆய்வுக்காக காத்மாண்டு எடுத்துச் செல்லப்படுகிறது. மேலும் இந்த ஆய்வுக்கு பிறகு விபத்து நடந்ததற்கான காரணம் தெரியவரும் என்று நம்பப்படுகிறது.