கர்நாடக மாநில அரசு சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் விதமாக மின்சார பேருந்துகளை இயக்குவதில் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் பெங்களூருவின் பிஎம்டிசி சார்பில் மின்சார பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் சார்பிலும் மின்சார பேருந்து சேவையை தொடங்குவதற்கு அரசு திட்டமிட்டது. இந்த மின்சார பேருந்தின் சோதனை ஓட்டம் நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில் இன்று முதல் மின்சார பேருந்து சேவை அமலுக்கு வந்துள்ளது.

இந்த பேருந்தில் 43 பேர் வரை பயணம் மேற்கொள்ளும் நிலையில், ஒரு இருக்கைக்கு மற்றொரு இருக்கைக்கும் இடையில் 12 மீட்டர் இடைவெளியில் விசாலமாக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கேஎஸ்ஆர்டிசி சார்பில் இன்று பெங்களூரு-மைசூர் இடையே மின்சார ரயில் சேவை ‌ தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மின்சார பேருந்து எவ்வித இரைச்சல் இல்லாமலும், மாசு இல்லாமலும் உயர்தர வசதியுடன் மக்கள் பயணிக்கலாம்.