சமீப நாட்களாகவே நாய்கள் குழந்தைகளை கடித்து கொன்றதாக கொடூரமான செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் உத்திர பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள சிஜி கஞ்ச் பகுதியில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது குழந்தையை தெருநாய்கள் ஒன்றுசென்ற்ந்து கொன்றுள்ளன.
குழந்தை வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது, சில தெருநாய்கள் குழந்தை மீது பாய்ந்து சுமார் 50 மீட்டர் தூரம் இழுத்துச் சென்றதாகத் தெரிகிறது. அங்கிருந்த வாலிபர் குழந்தையை காப்பாற்ற முயன்றபோது, அவரையும் நாய்கள் கடித்துக் கொன்றன. குழந்தையின் உடலில் கடிகள் இருந்துள்ளன. இந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.