
மதுரை மாவட்டத்தில் உள்ள முதலைக்குளத்தில் தொல்லியல் ஆய்வாளர் காந்தி ராஜன் மற்றும் சோலை பாலு ஆகியோர் 3 அடி அகலமும், 5 அடி உயரமும் உடைய நடுக்கலை கண்டெடுத்தனர். அந்த நடுக்கல்லில் வீரன் குதிரையின் மீது அமர்ந்து சவாரி செய்வது போல உள்ளது. வீரனின் வலது கையில் நீண்ட வாள் பிடித்த நிலையிலும், இடதுகை கயிற்றைப் பிடித்தவாறும் காணப்படுகிறது.
மேலும் நடுக்கல்லில் ஒரு பெண்மணி கையில் பணம் முடிப்பு வைத்திருப்பது போலவும், மற்றொரு ஆண் உருவம் பாதுகாவலன் போன்றும் அமைந்துள்ளது. அந்த சிற்பத்தில் இருக்கும் வீரர் ஒரு இன குழு தலைவராக இருக்கக்கூடும். அந்த சிற்பத்தை உள்ளூர் மக்கள் பாட்டன், பாட்டி கல் என கருதுகின்றனர். மேலும் அந்த நடுக்கல் 400 ஆண்டுகள் பழமையானது. அதே ஊரில் தமிழி, பிராமிக் கல்வெட்டுகளும், கற்படுக்கைகளும், பெருங்கற்கால தாழி பானைகளின் எச்சங்களும் காணப்படுகிறது.