திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அய்யலூர் ரயில்வே கேட் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் தோப்புப்பட்டியில் வசிக்கும் சின்னச்சாமி(65) என்பது தெரியவந்தது.

இவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை மறைத்து வைத்து விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சின்னசாமியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.