தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கஸ்தூரிரங்கபுரம் கிழக்கு தெருவில் கிருஷ்ணம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 மகன்கள் இருக்கின்றனர். அனைவரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருவதால் உறவுக்கார பெண் ஒருவர் கிருஷ்ணம்மாளை பராமரித்து வந்துள்ளார். கடந்த 8-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற கிருஷ்ணம்மாள் திடீரென காணாமல் போய்விட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மூதாட்டியை தேடி வந்தனர். நேற்று ஊருக்கு அருகே 2 கிலோ மீட்டர் தொலைவில் ஓடையில் மூதாட்டி அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.