சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை ஜெயம்கொண்ட விநாயகர் கோவில் தெருவில் அண்ணாமலை என்பவர் வசித்து வந்தார். இவர் வெளிநாட்டில்  வேலை பார்த்துவிட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக சொந்த ஊருக்கு வந்திருந்த நிலையில் அண்ணாமலை வீட்டில் இருந்தபடியே ஏதாவது வேலை பார்க்க வேண்டும் என நினைத்துள்ளார். இந்நிலையில் அவரது முகநூலில் இருந்து வந்த ஒரு அறிவிப்பை பார்த்து அந்த தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு உள்ளார். அதில் பேசிய நபர் அண்ணாமலையிடம் வீட்டில் இருந்தபடியே பென்சில் பேக்கிங் செய்யும் தொழில் செய்யலாம் என கூறியுள்ளார்.

மேலும் அதற்கு எந்திரம் மற்றும் அட்டைகள் போன்ற பொருட்கள் வாங்குவதற்கும் வரி செலுத்துவதற்கும் ரூ.2 லட்சத்து 17 ஆயிரத்தி 930 பல தவணைகளில் செலுத்தி இருக்கிறார். ஆனால் வேலை குறித்த எந்த தகவலும் அவர் அளிக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அண்ணாமலை இது குறித்து அவர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் முறையாக பதிலளிக்கவில்லையாம். இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அண்ணாமலை போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.