செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை பிஜேபி நீக்கவில்லை. அவுங்களாகவே வெளியில போய் இருக்காங்க. அனைத்திந்திய இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை  நீ சண்டை போடாதே வா…. நீ சண்டை போடாதே வா… இப்படி எங்க அக்கா காலமானதில் இருந்து…

ஏழு வருஷமா யாரோ ஒருத்தர் போகாமல் இழுத்து வைக்கிறது வேலையா இருக்கு. அதனால இன்னிக்கு அவங்களா அறிவிச்சிருக்காங்க. பிஜேபியின் உடைய கூட்டணி அரசியல் என்பது…. 1996இல் இருந்து துவக்கம். ஏனென்றால் 1992இல்  தேசிய அளவில் பாரதிய ஜனதா கட்சி தனித்துப் போட்டியிட்டு…  இந்தியாவிலேயே தனி பெரும் கட்சியாக வந்தோம்.

காங்கிரஸ் எங்களுக்கு அடுத்து. 2014இல் 30 ஆண்டுகளுக்குப் பிறகு… 1984இல் பாரதிய ஜனதா கட்சி தலைமையில பெரும்பான்மை ஆட்சி,  நிலையான ஆட்சி ஏற்பட்டது. அதிமுக இன்னிக்கு ஏதோ பத்து பேர் பட்டாசு வெடிக்கிறதுக்கு இருந்தா…  கூட்டணி ஃபாமும் பண்ணலாம், வெளியேயும்  போகலாம். அதனால அது ஒன்னும் பெரிய விஷயம் இல்ல.

பத்து பேர் போதுமே   பட்டாசு வெடிக்க… அதனால அதை பற்றி பாரதிய ஜனதா கட்சி கவலைப்படல. ஏற்கனவே இந்த இரண்டு பெரிய திராவிட இயக்கங்கள் இல்லாமல் நாங்கள் கூட்டணி அமைத்து,  20 சதவீதம் வாக்குகள் பெற்ற ஒரு பொலிட்டிக்கல் ஃபார்முலேசனா இருந்தோம்.

அதனால இது பாரதிய ஜனதா கட்சிக்கு நஷ்டம் இல்ல. இருந்தாலும் கூட்டணியில் இருந்து ஒரு நண்பர் போறார். அப்படின்னா….  ஐயோ பாவம் அப்படின்னு சொல்றது,  இயல்புதான். அதனால அந்த மாதிரி நாம அதிமுகவின் வெளியேற்றம் பற்றி கவலைப்பட வேண்டும் என தெரிவித்தார்.