நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் பள்ளிக்கூடங்களில்… தமிழ்நாட்டில் இருக்கிற பள்ளிக்கூடங்களில்…. பிள்ளைகள் தட்டு தடுமாறி ஒரு வார்த்தை தவறி ஆங்கிலம் பேசி விட்டால் ? தண்டம் கட்டணும்… முட்டிக்கால் போடணும்… அம்மா அப்பாவை கூட்டி வரணும். இந்த மாதிரி பள்ளிக்கூடங்களுக்கு இழுத்துப் பூட்டி,  பூட்டு  போடுவதற்காகவது நாம் தமிழர் ஆட்சி அவசியம் வர வேண்டியது இருக்கிறது.

செத்து போன சமஸ்கிருத மொழியை உயிர்ப்பிக்க  சமஸ்கிருதம் படி. 400 ஆண்டுகளை கூட தொடாத ஹிந்தியை எல்லோரும் படி…  ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மூத்த எங்கள் தாய்மொழி தமிழை…. என் தாய் நிலத்திலே படிக்க முடியவில்லை என்ற அவமானம் எவ்வளவு கொடுமையானது என்பதை இளைய தலைமுறை தமிழ் பிள்ளைகள் சிந்தித்து பார்க்கணும்?

உன் தாய் அழகானவள்….  உன் தாய் மதிப்பு மிக்கவள்… பெருமைக்குரியவள் என்று சொல்வதற்கு உனக்கு உரிமை உண்டு, தகுதி உண்டு. ஆனால் என் தாய் அழகற்றவன்,  இழிவானவன், மதிக்கத்தக்கவள் என்று சொல்வதற்கு உலகில் எவனுக்கும் உரிமையும்,  தகுதியும் இல்லை.

உலகத்தில் பல மொழிகள் என் தாய்மொழி போட்ட பிச்சை. உலகத்தில் எல்லோரும் அவனவன் தாய் மொழியில் பேசிக் கொண்டிருக்கிறான். நாங்கள் அந்த மொழிகளின் தாய் மொழியில் பேசிக் கொண்டிருக்கிறோம். கேரள கவிஞன் ஆற்றூர் ரவி வர்மா….  உலகிலேயே அவரவர் தாய்மொழியில் ஆகச்சிறந்த இலக்கியங்களை படிக்கிற அரிய வாய்ப்பு கிரேக்கர்கள்…

சீனர்களை தாண்டி உலகத்தில் தமிழர்களுக்கு மட்டும் தான் இருக்கிறது. அந்த தமிழ் மொழி என் தாய்மொழி மலையாளத்திற்கு தாய்மொழி என்பதில் எனக்கு பெருமை… என் பாட்டியின் மொழி என்பதில் எனக்கு பெருமை என்று பதிவு செய்திருக்கிறான் என சீமான் பேசினார்.