அதிர்ச்சியூட்டும் வகையில் சமையலறை ஜன்னல் வழியாகப் பாம்பு ஒன்று எட்டிப் பார்க்கும் திகிலூட்டும் காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜன்னல் கண்ணாடியின் மறுபுறம் இருந்த அந்தப் பாம்பு, சமையலறையில் என்ன சமைக்கப்படுகிறது என்பதைப் பார்ப்பது போலவும், ஜன்னல் வழியாக உள்ளே நுழைய முயல்வது போலவும் அமைந்திருந்த இந்தக் காட்சிகள் பார்ப்போரை உறைய வைத்தன.
View this post on Instagram
தகவலறிந்து வந்த பாம்பு மீட்பு நிபுணர், வீட்டின் வெளிப்புறச் சுவரில் ஏறி ஜன்னல் ஓரத்தில் பதுங்கியிருந்த அந்தப் பாம்பைச் சாமர்த்தியமாக மீட்டார். அதுவரை ஜன்னல் வழியாகப் பார்த்தபோது சிறியதாகத் தெரிந்த அந்தப் பாம்பு, மீட்கப்பட்ட பின்னர் அதன் பிரம்மாண்டமான நீளத்தைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அச்சத்தில் அலறினர். நல்வாய்ப்பாக அந்தப் பாம்பு எவ்வித பாதிப்புமின்றி மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது.
இந்தக் காணொலியைக் கண்ட இணையவாசிகள், “சமையலறையில் என்ன விருந்து நடக்கிறது என்று பார்க்க வந்திருக்கிறது போல” என்றும், “தாகத்தில் இருக்கும் பாம்பிற்கு யாராவது தண்ணீர் கொடுங்கள்” என்றும் நகைச்சுவையாகவும் வியப்புடனும் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
